18th February 2020 12:21:55 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு ஒத்துழைப்பை வழங்கி வைக்குமாறு பாடசாலை அதிபரினால் விடுத்த வேண்டுகொளுக்கிணங்க 57, 571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வைக்கப்பட்டன.
இம் மாதம் (14) ஆம் திகதி இடம்பெற்ற கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டிக்கு 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களின் பணிப்புரைக்கமைய 5 கூடாரங்கள், ஒரு நகரக்கூடிய கழிவறை, கல்லூரி மைதானங்களுக்கு நீர்பாச்சி சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் 571 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் 9 ஆவது பொறியியல் படையணி மற்றும் 11 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் பங்களிப்புடன் இல்ல விளையாட்டு போட்டிகளிற்கு ஒத்துழைப்பு வழங்கி வைக்கப்பட்டன.
கல்லூரியின் விளையாட்டு மைதான வளாகம் கனரக ரோலர் இயந்திர வாகனங்களை பயண்படுத்தி மைதான நிலங்கள் பதப்படுத்தப்பட்டன, அத்துடன் கடுமையான வெயிலின்மையினால் மாணவர்களுக்கு பயண்படும் வகையாக நீர் தொட்டில்களின் மூலம் குடிநீர்களும் வழங்கி வைக்கப்பட்டன. Adidas footwear | Autres