18th February 2020 17:41:48 Hours
இராணுவ பதவிநிலை பிரதானியான மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் இம் மாதம் (17) ஆம் திகதி திருகோணமலையிலுள்ள இராணுவ லொஜஸ்டிக் கல்லூரிக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
இங்கு வருகை தந்த பதவிநிலை பிரதானியை லொஜஸ்டிக் கல்லூரியின் கட்டளை தளபதி பிரிகேடியர் எல்.டி.எஸ்.எஸ் லியனகே மற்றும் பிரதி கட்டளை தளபதியான கேர்ணல் எம்.எம் சல்வாதுர அவர்கள் வரவேற்றனர். பின்னர் பதவிநிலை பிரதானி அவர்களினால் லொஜஸ்டிக் கல்லூரி வளாகத்தினுள் மாமர நடுகை மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் பதவிநிலை பிரதானியினால் பயிற்சி கல்லூரி வளாகங்களை பார்வையிட்டு பின்பு கேட்போர் கூடத்திற்கு சென்றார். அங்கு சென்ற இவருக்கு இந்த பயிற்சி கல்லூரியின் பிரதான விரிவுரையாளர் கேர்ணல் எச்.ஏ.எம் பிரேமரத்ன அவர்கள் லொஜஸ்டிக் கல்லூரியின் பயிற்சி நெறிகள் மற்றும் நிர்வாக பொறுப்புகள் தொடர்பான விளக்கங்களை முன்வைத்தார்.
இறுதியில் பதவிநிலை பிரதானிக்கு இவரது வருகையை கௌரவிக்கும் முகமாக லொஜஸ்டிக் கல்லூரியின் கட்டளை தளபதி அவர்களினால் நினைவுச் சின்னமொன்று வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best jordan Sneakers | Nike Shoes