14th February 2020 20:10:32 Hours
கொமான்டோ படையணியைச் சேர்ந்த 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட நிலையில் இவருக்கு கனேமுல்லையிலுள்ள இவரது கொமான்டோ தலைமையகத்தில் இம் மாதம் (13) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பதவியுயர்த்தப்பட்டு தலைமையகத்திற்கு அணிவகுப்பு மரியாதை நிகழ்விற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்களை கொமான்டோ படைத் தலைமையகத்தின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் சியாமல் சில்வா அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் அணிவகுப்பு கௌரவ மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் இந்த மூத்த அதிகாரி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டும், பின்னர் தலைமையகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபி வாளகத்திற்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீர ர்களை நினைவு படுத்தி அஞ்சலிகளையும் செலுத்தியதுடன், தலைமையகத்திலுள்ள படையினர்கள் மத்தியில் உரையையும் நிகழ்த்தி தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் இராணுவ எகடமியின் கட்டளை தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த ஞானரத்ன, கொமான்டோ பிரிக்கட் தலைமையகத்தின் கட்டளை தளபதி சானக ரத்னாயக, மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports News | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp