13th February 2020 14:08:51 Hours
புத்தளையில் அமைந்துள்ள அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலைய திறந்த மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட கலாச்சார நிகழ்வு, கடந்த 08 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றன.
மாணவர் அதிகாரிகளின் மனதைப் புத்துணர்வூட்டவும், ஆன்மீக, கலாச்சார மற்றும் அவர்களின் அணுகுமுறைகளை மேம் படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலாச்சார நிகழ்வில் அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த ஜயவீர மற்றும் நிரந்தர ஊளியர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
மேஜர் நந்தன செனவிரத்ன அவர்களால் நடாத்தப்பட்ட இந்த கலாச்சார நிகழ்வில் நடன கெமுனு ஹேவா படையணியின் படையினர் குழுவினரால் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்பட்டன.
மேஜர் நந்தன செனவிரத்ன அவர்களின் தலைமையில் வரலாற்று உண்மைகள் மற்றும் பாரம்பரிய கலாச்சார நடனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நடனத்தில் 13 பேர் கொண்ட நடனக் குழுவினரால் 'தெல்மே' நடனம், தோலோஸ் தேவியன் (பன்னிரண்டு கடவுள்கள்), இது முக்கிய 'கோஹோம்ப கன்காரிய' பேய் நடனங்களில் ஒன்றான'அஸ்னே' நடனம், மற்றும் நாட்டு நடனமான 'நாக ரக்க்ஷ' (கோப்ரா மாஸ்க்) உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் முன்வைக்கப்பட்டன. இறுதியாக இடம்பெற்ற மேள இசை நிகழ்வுடன் இந்நிகழ்வுகளானது நிறைவடைந்தன. Running sneakers | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite