13th February 2020 14:20:51 Hours
சிறிய மற்றும் நடுத்தர வணிக மற்றும் தொழில் மேம்பாடு, நிறுவன மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சினால், கிழக்கு பாதுகாப்பு படைத் தமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய, கிழக்கு பாதுகாப்பு படைத் தமையகத்தின் படையினரால், கடந்த இரண்டு வருடங்களாக அடர்ந்த காடுகளாக வளர்ந்துள்ள நிலையில் காணப்பட்ட வாழைச்சேனையில் உள்ள பிரபலமான காகித தொழிற்சாலை வளாகமானது சுத்தம் செய்யும் பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
இந்த திட்டமானது சில நாட்களுக்கு முன்பு பதில் பதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இந்த திட்டம் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெனாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இம் மாதம் 03 ஆம் திகதி திங்கட்கிழமை படையினரால் 1 டிகர் (அகழ்வு இயந்திர கிரேன் டிரக்), ஒரு பேக்ஹோ மற்றும் புல் டோஸர் ஆகிய இயந்திரங்களை பயன்படுத்தி 20 ஏக்கர் பரப்பளவிளான புதர்கள் மற்றும் புட்களால் மூடப்பட்டிருக்கும் இவ்விடமானது சுத்தம் செய்யப்பட்டது. affiliate tracking url | nike fashion