14th February 2020 19:00:57 Hours
மேஜர் ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட 17 மேஜர் ஜெனரல்கள் தங்களது பதவி உயர்வை முன்னிட்டு பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இன்று மதியம் (12) ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பை முன்னிட்டு பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஜெனரல்களின் பதவி உயர்விக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, தங்களது தேசிய கடமைகளை மேலும் திறம்படச் செய்யுமாறும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஜெனரல்களுக்கான வௌ்ளிப் பதக்கத்திலான வாளைப் பரிசளித்தார். இராணுவத்தில் பதவி உயர்வை பெற்ற ஜெனரல்களுக்கு இதுவே முதன் முறையாக வழங்கப்பட்ட பரிசில்களாக காணப்படுகின்றது.
மேஜர் ஜெனரல் ஆர்எல்சி பெனாண்டோ, மேஜர் ஜெனரல் பி.பி ரந்தெனிய, மேஜர் ஜெனரல் எல்பிஆர் பிரேமலால், மேஜர் ஜெனரல் டபிள்யு.எல்.பி.டபில்யு பெரேரா, மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.டி.ஏ.டி குணவர்தன, மேஜர் ஜெனரல் கே.டபிள்யு.ஆர்.டிஆப்ரூ,மேஜர் ஜெனரல் டி.எஸ்.டி வெலிகல, மேஜர் ஜெனரல் எச்.எச்.ஏ.எஸ்.பி.கே சேனாரத்ன, மேஜர் ஜெனரல் என்.டி.எஸ்.பி நிவுன்ஹல்ல, மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார, மேஜர் ஜெனரல் ஏ.ஏ.ஐ.ஜே பண்டார, மேஜர் ஜெனரல் எச்.இ.எம்.ஆர்.பி.டி ஹத்னகொட, மேஜர் ஜெனரல் எம்.டி.யு.வி குணதிலக்க, மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே, மேஜர் ஜெனரல் எச்.எம்.டி.பி ஹங்கிலிபொல,மேஜர் ஜெனரல் என்.ஆர். லமாஹேவகே மற்றும் மேஜர் ஜெனரல் டபிள்யு.பி.ஏ.கே திலகரத்ன ஆகியோர் இராணுவ தளபதியோடு கலந்துரையாடினர். Sports brands | adidas poccnr jumper dress pants size