05th February 2020 13:31:30 Hours
அனுராதபுரத்தின் பெமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த திரு கே டீ நந்தசேன அவர்களுக்கான புதிய வீடை நிர்மானிக்கும் நோக்கில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களின் தலைமையில் அடிக்கல் நாட்டும் விழாவானது வியாழக் கிழமை (06) இடம் பெற்றது.
வன்னி பாதுகாப்பு படையினரின் நலன்புரி திட்டத்தின் ஓர் அங்கமான அமையும் இச் சேவையின் மூலம் பல சிரமங்களுக்கு மத்தியில் நிரந்தர வீடற்று காணப்படும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத் தலைவரான திரு கே டீ நந்தசேன அவர்களுக்கான புதிய வீடை நிர்மானிக்கும் பணி;க்கான நன்கொடையானது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு ஜநாத் குணசேகர அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பானது 212படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் அணில் பீரிஸ் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இக் கட்டுமானப் பணிகள் 21ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமார் ஜெயபதிரன அவர்களின் கண்காணிப்பின் கீழ் 212ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் வழிகாட்டலின் கீழ் 5ஆது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் 212ஆவது படைப் பிரிவின் அதிகாரிகள் 5ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் அதிகாரிகள் மஹாவலிச்சிய பிரதேசத்தின் பிரதேச செயலக உப திட்டமிடல் பணிப்பாளர் அத்துடன் கிராம வாசிகள் பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Mysneakers | Releases Nike Shoes