05th February 2020 12:02:50 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் 65ஆவது படைத் தலைமையகத்திற்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தை வியாழக் கிழமை (30) மேற்கொண்டார்.
மேலும் இதன் போது வருகை தந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களை 65ஆவது கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஹேமந்த பண்டார அவர்கள் வரவெற்றதுடன் இப் படைத் தலைமையத்தால் முன்னெடுக்கப்படும் சேவைகள் மற்றும் கடமைகள் தொடர்பாக விளக்கமளித்தார். இதன் போது 651 மற்றும் 653 போன்ற படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் 653ஆவது படைப் பிரிவு , 17ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் முலங்காவிலில் உள்ள பயிற்சி பாடசாலை அத்துடன் 19ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி போன்றவற்றிற்கான விஜயத்தை மேற்கொண்டார். Running Sneakers | Air Jordan Release Dates Calendar