08th February 2020 15:24:14 Hours
இலங்கை இராணுவ தளபதியும் பிரதி பாதுகாப்பு தலைமை பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின் பிரகாரம் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்ட ரஷ்ய குடியரசின் இராணுவ தளபதியான ஜெனரல் ஒலேக் சலிக்கொவ் அவர்கள் இலங்கையின் மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (5) ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த ரஷ்ய இராணுவ தளபதியை மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்கள் வரவேற்றார். பின்பு இவர்கள் இருவரும் நாடுகளுக்கு இடையிலான உறவு முறைகளை மேம்படுத்துவது தொடர்பான விடயங்களை பரிமாறிக் கொண்டனர்.
தேவையான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு ரஷ்ய நாடு காத்திருக்கின்றது என்று ரஷ்ய இராணுவ தளபதியவர்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்தார். அத்துடன் இந்த இரு நாடுகளும் நட்பு நாடுகளாக அந்தஸ்த்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இறுதியில் ரஷ்ய குடியரசின் இராணுவ தளபதியவர்கள் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு நினைவு பரிசொன்றையும் வழங்கி வைத்தார். latest Nike release | Nike React Element 87