05th February 2020 12:05:50 Hours
ரஷ்ய குடியரசின் இராணுவ தளபதி ஜெனரல் ஒலோக் சல்யுகோப் அவர்கள் கொழும்பிலுள்ள விமானப்படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை இன்று 05 ஆம் திகதி மேற்கொண்டார். இங்கு வருகை தந்த இராணுவ தளபதியவர்களுக்கு விமானப்படையின் சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
பின்பு ரஷ்ய இராணுவ தளபதி அவர்களை விமானப்படைத் தளபதியான எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் வரவேற்று பின்னர் விமானப்படைத் தளபதியின் பணிமனையில் சந்திப்புக்களை மேற்கொண்டார்.
இச்சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கருத்துக்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர். இறுதியில் இவர்களது இச்சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவர்களும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர். இறுதியில் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் ரஷ்ய இராணுவ தளபதியவர்கள் கையொப்பமிட்டார்.
இராணுவ தளபதியும் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது அழைப்பையேற்று ரஷ்ய இராணுவ தளபதியவர்கள் ஐந்து நாள் விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். . Nike air jordan Sneakers | Nike