03rd February 2020 16:46:38 Hours
ரஷிய குடியரசின் இராணுவ தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ் (Oleg Salyukov) அவர்கள் இலங்கைக்கான ஜந்து நாள் விஜயத்தை மேற்கொண்ட இன்றைய தினம் இங்கு வருகை தந்த ரஷிய இராணுவ தளபதி அவர்கள் ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு வருகையை இம் மாதம் (3) ஆம் திகதி மேற்கொண்டார்.
நினைவு தூபிக்கு வருகை தந்த ரஷிய இராணுவ தளபதியை இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் வரவேற்றார். பின்னர் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினரால் இவர் வரவேற்கப்பட்டு அழைத்து சென்று இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளை செலுத்தினர்.
இலங்கை இராணுவ பொலிஸாரினால் ரஷ்ய இராணுவ தளபதியவர்கள் ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள 80 அடி உயரமுள்ள நினைவு தூபிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பின்பு இவர் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காகப் போராடிய இலங்கை போர் வீரர்களை நினைவு படுத்தி மலர் மாலை அஞ்சலிகளை செலுத்தி மரியாதையை செலுத்தினர்.
பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி ‘லாஸ்ட் போஷ்ட்’ துக்க அஞ்சலி நாதங்கள் இசைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்கள் நினைவு கூறப்பட்டனர். பின்னர் இறுதியில் இராணுவ தளபதி அவர்கள் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு புறப்பட்டு சென்றார்.
இச்சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவ உயரதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர்.
இந்த ‘ரணவிரு நினைவு தூபி’ ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் பாராளுமன்றத்திற்கு முன்னால் 2008 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் திகதி நினைவு தூபியானது நிர்மானிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் கொடிய பயங்கரவாத தாக்குதலில் பலியான பாதுகாப்பு படையினர்களுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். . short url link | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ