Header

Sri Lanka Army

Defender of the Nation

29th January 2020 12:17:22 Hours

வினியோக கட்டளை படைத் தலைமையக தளபதிக்கு பிரியாவிடை நிகழ்வு

கொஸ்கமையில் அமைந்துள்ள வினியோக கட்டளையின் தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.ஜி. டி சிரிசேன அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு கொஸ்கமையில் அமைந்துள்ள வினியோக கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்றன.

மூன்று தசாப்த காலமாக இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்று செல்லும் வினியோக கட்டளையின் தளபதிக்கு இராணுவத்தினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி நுலைவாயிற் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஓய்வு பெற்று செல்வதன் நிமித்தம் தேநீர் விருந்துபசாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துடன் அனைத்து நிகழ்வும் நிறைவடைந்தன.

இந்த நிகழ்வில் வினியோக கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதி உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் பலரும் கலந்துகொண்டனர்.

அதற்கமைய, ஓய்வுபெற்று செல்லும் இந்த அதிகாரி ஓய்வு பெற்றுசெல்லும் முன்னர், தியதலாவையில் அமைந்துள்ள 7ஆவது இலங்கை பொலிஸ் படையணிக்கு விஜயத்தை மேற்கொண்டு படையினர்களிடம் விடைப் பெற்றுக் கொண்டார். Authentic Nike Sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival