Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2020 14:00:59 Hours

21 ஆவது படைப் பிரிவினரால் மிகிந்தலே பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடை வழங்கல்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 21ஆவது படைத் பிரிவு தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் அனுராதபுரத்தில் அமைந்துள்ள மிஹிந்தலே பிரதேசத்தில் நேத்தியகம வித்யாலயத்தில் கல்வி கற்கும் வரிய குடும்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள், பாடசாலை பைகள் போன்றன இம் மாதம் (26) ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் மேலும் ஒரு சமூக நல சார்ந்த திட்டமாக ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நன்கொடை திட்டமானது, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களின் ஆசீர்வாதத்துடன் 21 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களின் ஒருங்கிணைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நன்கொடைகள் கனடாவை சேர்ந்த இரண்டு நன்கொடையாளர்களான திரு மஹிந்த பண்டார திசாநாயக்க மற்றும் செல்வி ஜயந்தி திசானநாயக்க அவர்களின் நிதியுதவியுடன் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கேணல் அனில் பீரிஸ் அவர்களின் தலைமையில் 212 படைப்பிரிவின் ஏற்பாட்டில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 212 ஆவது படைப் பிரிவினரின் அழைப்பின் பேரில் மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்கள் ரஜரட்ட பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நன்கொடைகளை வழங்கினார்.

மேலும் வன்னி படையினரால் கடந்த ஆண்டுகளில் வரிய குடும்பத்தினருக்கு வீடுகள் நிர்மாணித்தல், மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், குடிநீர் சுத்திகரிப்பு போன்ற பல்வேறு சமூகம் சார்ந்த பல நலத்திட்டங்களை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் - மிஹிந்தலை பிரதேச செயலகத்தின் உதவி பணிப்பகம், மிஹிந்தலை ரஜரட பல்கலைக்கழகத்தின் உதவி பதிவாளர் மற்றும் சிரேஷ்ட உதவி பதிவாளர், மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தின் OIC, நித்தியகம பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள்,7 ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ கவச படையணியின் கட்டளை தளபதி, சிவில் விவகார அலுவலர் மற்றும் 21 ஆவது படைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.Sport media | NIKE