Header

Sri Lanka Army

Defender of the Nation

27th January 2020 14:00:59 Hours

படையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன்னிசை நிகழ்வு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ், 59 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்வானது, சனிக்கிழமை 25ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வு பிரபல்யமான இராணுவ ஹைலேன்டர்ஸ் இசை குழுவின் இசையமைப்புடன் இடம்பெற்றது.

இராணுவம் மற்றும் பொது மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை மேலும் அதிகரிக்கும் முகமாக, கர்நாட்டகணி கோகிலை மைதானத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சூரிய குமார் முத்தழகு, எம் கலாவதி, ஜோர்ஜ் சேனாநாயக்க, சந்தனி சில்வா மற்றும் ரணவிரு நட்சத்திர குழுவினர் ஆகியோர் இவ் இன்னிசை நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ‘பிரவீனா’ மற்றும் ‘சைன் கேல்ஸ் நடனக் குழுவினரின் அரங்கேற்றத்துடன் இடம்பெற்ற இவ் இன்னிசை நிகழ்வில், புகழ்பெற்ற நிகழ்ச்சி அறிவிப்பாளர்களான நதீக கருனாநாயக்க, செந்தில் நாதன் மற்றும் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

593 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேணல் வசந்த பலமகும்புர அவர்களின் வழிகாட்டலின் கீழ், 593 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வானது, 59ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் பிரியந்த பெரேரா அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

சனிக்கிழமை 25ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.

மதத் தலைவர்கள், முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி, பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகங்களின் படைத் தளபதிகள் , பாதுகாப்பு படைப் தலைமையகங்களின் கட்டளைத் தளபதிகள், முப்படைகள் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், இளைஞர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். affiliate tracking url | Mens Flynit Trainers