Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2020 17:40:57 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் சிங்கப் படையணியின் உயரதிகாரிக்கு கௌரவ மரியாதைகள்

இராணுவ சேவையில் 34 வருட சேவைகளை மேற்கொண்டு ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் இராணுவ சிங்கப் படையணியைச் சேர்ந்த மூத்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களுக்கு அம்பேபுஸ்சையிலுள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் இம் மாதம் (24) ஆம் திகதி கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் இந்த மூத்த உயரதிகாரி தலைமையகத்தினுள் அமைந்துள்ள நினைவு தூபி வளாகத்திற்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு படுத்தி கௌரவ அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் சிங்கப் படையணி தலைமையக சாஜன் விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் இணைந்து கொண்டார்.

மேலும் அன்றைய தினம் அதிகாரி விடுதியில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்விலும் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் விநோதமாக நாளை களித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் சிங்கப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதநாயக, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே, வன்னி பாதுகாப்பு ப டைத் தளபதி ரோஹித தர்மசிறி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன, 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்கள் இணைந்து கொண்டனர்.short url link | Sneakers