21st January 2020 08:45:08 Hours
அவுஸ்திரேலியா நன்கொடையாலியான திரு பிரிதி கஜனாயக மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களது அனுசரனையில் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேணல் அனில் பீரிஸ் அவர்களது பூரண ஏற்பாட்டில் எப்பாவளையில் அமைந்துள்ள இஹல ஹல்மில்லேவ அதிரன்னிகம பிரதேசத்தில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தாருக்கு வீட்டை நிர்மானித்து கொடுப்பதற்காக கட்டுமான பணிகளை ஆரம்பம்.
அதற்கமைய இந்த புதிய வீட்டிற்கான அடி கல் நாட்டும் நிகழ்வானது (19)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பயனாளிகளான திருமதி ஏ.ஏ.அனுஷா தில்ருக்க்ஷி மற்றும் அவரது நான்கு குழந்தைகளின் பங்கேற்புடன் எப்பாவளை இஹல ஹல்மில்லேவ அதிரன்னிகம பிரதேசத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 212 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கேணல் அனில் பீரிஸ் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 21ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி ஆகியோர்களின் ஆலோசனைக்கமைய 212 ஆவது படைப்பிரிவின் கீழ் இயங்கும் 7ஆவது (தொண்டர்) இலங்கை கவசப் படையணியின் படையினர்களால் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
இந்த நிகழ்வில் தலாவ பிரதேச செயலாளர் திரு என்.எச்.ஆர் நிசாந்த, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், 7ஆவது (தொண்டர்) இலங்கை கவசப் படையணியின் கட்டளை தளபதி உட்பட பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். latest Nike Sneakers | UK Trainer News & Releases