Header

Sri Lanka Army

Defender of the Nation

18th January 2020 08:30:40 Hours

யாழ் படைத் தளபதியை அமைச்சர் மற்றும் ஆளுனர் சந்திப்பு

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரும், கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சருமான விமல் வீரவங்ஷ மற்றும் அவரது செயலாளர் திரு J.A ரஞ்ஜித் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இம் மாதம் (17) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டனர்.

வருகை தந்த அமைச்சர் மற்றும் செயலாளரை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார்.

பின்னர் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் சந்திப்பு ஒன்றுகூடலொன்று இடம்பெற்றன.

மேலும் அன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுனர் மதிப்புக்குரிய திருமதி P.S.M சால்ஷ் அவர்களை யாழ் படைத் தளபதி சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இச்சந்திப்பின் போது வடமாகாண பொதுமக்களது நலன்புரி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. Running Sneakers | Sneakers