Header

Sri Lanka Army

Defender of the Nation

18th January 2020 08:20:40 Hours

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரான எச்.ஈ திரு டெனிஸ் சைஃபி அவர்கள் வடக்கிற்கான விஜயத்தின் போது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான பயணத்தை வியாழக் கிழமை (16) மேற்கொண்டதுடன் இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களை சந்தித்தார்.

இதன் போது இப் பிரதிநிதியவர்கள் யாழ் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் காணி விடுவிப்பு மீள் குடியேற்றம் மற்றும் வெடிகுண்டு அகற்றல் தொடர்பான விடயங்களை கலந்துரையாடினார்.

இதன் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் யாழ் பிரதேசத்தில் படையினரால் மேற்கொள்ளப்படும் சமூக நலப்புரி திட்டங்கள் தொடர்பாக விளக்கியதுடன் இறுதியாக இப் பிரதிநிதியவர்களுக்கு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார். Running sport media | Nike React Element 87