Header

Sri Lanka Army

Defender of the Nation

18th January 2020 09:40:40 Hours

இராணுவப் படையினரால் கஞ்சா மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றல்

வவுணியா மன்னார் வீதி நெரியகுளம் பிரதேசத்தில் இராணுவப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைச் சாவடியில் சுமார் 6.8 கிலோ பாரத்தை உடைய 51 ஜெலனைட் குச்சிகள் மன்னார் தனியார் பேருந்திலிருந்து கடந்த மாலை (17) வேளை மீட்கப்பட்டது.

அந்த வகையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 5ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் இப் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் போன்றோர் செட்டிகுளம் பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

அதேவேளை கெப்பிடிகொல்லாவ ஹெரவபத்தான வீதியில் உள்ள இராணுவத்தினரின் சோதனைச் சாவடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இலங்கை போக்குவரத்து பேருந்தில் சுமார் 2கிலோ கேரள கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்கள் வெள்ளிக் கிழமை (17) கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 17ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட இவ்விரு சந்தேச நபர்களும் கெப்பிடிகொல்லாவ பொலிசாரிடம் மேலதிக விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டனர். Running sports | Nike Air Max