Header

Sri Lanka Army

Defender of the Nation

12th January 2020 08:02:31 Hours

இராணுவ படைக்கலச் சிறப்பணி பயிற்சி முகாமின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழா

இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணிக்கு உரிய பயிற்சி முகாமானது அநுராதபுரத்திலுள்ள கவரங்குளத்தில் அமைந்துள்ளது. இந்த பயிற்சி முகாமானது 1984 ஆம் ஆண்டு ஜனவாரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இதன் 36 ஆவது ஆண்டு நிறைவானது இம்மாதம் (1) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த ஆண்டு நிறைவு நிகழ்விற்கு பிரதம அதிதியாக இந்த பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் M.W.A.R.C விஜயசூரிய அவர்கள் வருகை தந்தார். இவரை இங்குள்ள படை வீரர்கள் இராணுவ சம்பிரதாய முறைப்படு அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்றனர்.

பின்னர் கட்டளை அதிகாரி அவர்கள் பயிற்சி முகாம் வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பயிற்சி முகாமினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பல் நிகழ்வுகளிலும் பங்கேற்றுக் கொண்டனர்.

இராணுவ படைக்கலச் சிறப்பணியின் பயிற்சி முகாம்களில் தந்திரோபாய ஆதரவு படையணி பயிற்சி முகாம் கலேத்தவையிலும், தானியங்கி மற்றும் கௌசவாகான பயிற்சி பிரிவானது கொக்காவிலில் அமைந்துள்ளது.

இந்த பயிற்சி முகாமில் கடந்த கால தளபதிகள், அதிகாரிகள் மற்றும் போர் வீரர்கள் தங்களது தொழில்முறை தரத்தை உயர்த்துவதற்கான ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan Sneakers | Nike Shoes