09th January 2020 15:14:46 Hours
இலங்கை இராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப உள்நாட்டு தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திகொள்ளும் நிமித்தம் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் அபிவிருத்தி கிளையினரால் சமீபத்தில் “ஶ்ரீ மான” என்ற திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தால் தயாரிக்கப்பட்ட முதல் கையடக்க பாலிஸ்டிக் கணினி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கணினியின் பயன்பாடுகள் மூலம் ஆயுதங்களைக் கையாளும் திறன்களை மேம்படுத்துவதற்கும் துல்லியமான மற்றும் உத்தரவாதமான முறையில் ஆயுதங்களை துல்லியமாக குறிவைக்கும் செயல்திறனை அதிகரிகும். இந்த கையடக்க கணினி மூலம் ஒரே நேரத்தில் வெவ்வேறு ஆயுத வகைகள் அல்லது திறன்களை ஒருங்கிணைக்க முடியும், ஒரே இடத்தில் மற்றும் பணியில் இணையற்ற நெகிழ்வுத்தன்மையை உருவாக்குவதோடு, ஒரே ஆயுத வகை அல்லது பல ஆயுத வகைகளுடன் இலக்குகளை திறம்பட ஈடுபடுத்தும் திறனை ஒரே நேரத்தில் வழங்குகிறது.
எதிர்காலத்தில் பீரங்கி ஆயுத நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இந்த கணினிமயமாக்கப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு முறையைத் தூண்டுவதன் மூலம் வலையமைப்பு திட்டங்கள் போர் திறன்களைப் பெறுவதற்கான முதல் படியைத் தொடங்க இலங்கை இராணுவம் தனது திட்டமிட்ட திட்டங்களைத் ஆரம்பிக்கவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் அபிவிருத்தி கிளையின் பணிப்பாளர் பிரிகேடியர் என்.பி அகுரன்திலக, பீரங்கி படையணியின் கட்டளை தளபதி கேர்ணல் எம்.பி கருணாரத்ன, இந்த திட்டத்தின் முதன்மை புலனாய்வாளர் கேணல் எஸ்.டி உதயசேன, மற்றும் பீரங்கி பயிற்சி பாடசாலையின் படைத் தளபதி லெப்டினன் கேணல் சி.தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர். latest Running Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ