07th January 2020 22:05:43 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் இலங்கை பீரங்கிப் படையணியின் 20 ஆவது படைத் தளபதியாக பனாகொடையிலுள்ள தலைமையகத்தில் இம் மாதம் (6) ஆம் திகதி பதவியேற்றார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதிக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இராணுவத்தில் 34 வருடங்கள் பாரிய சேவைகள் ஆற்றி ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் 19 ஆவது பீரங்கிப் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்கள் இம் மாதம் (4) ஆம் திகதி பீரங்கிப் படையணி தலைமையகத்தில் வைத்து கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன. பின்னர் முன்னாள் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் உள்ள நினைவு தூபிக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்த அதிகாரிக்கு பிரியாவிடை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த உயரதிகாரியின் அணிவகுப்பு நிகழ்வில் இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த நித்ய மற்றும் தொண்டர் படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes | Air Jordan