Header

Sri Lanka Army

Defender of the Nation

07th January 2020 21:55:32 Hours

இராணுவத்தினரது உதவியுடன் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12, 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சமூக நலன்புரி உதவி திட்டத்தின் கீழ் மொனராகல மாவட்டத்தில் குறைந்த வருமானத்தை பெற்று வரும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மொனராகல மாவட்டத்திலுள்ள கல்லராவ, கனகஸ்பிடிய மற்றும் பாரவய முன்பள்ளியைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

‘கெரிங் ஹாட்ஷ்’ நிறுவனத்தின் அனுசரனையில் 121 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இம் மாதம் (6) ஆம் திகதி மொனராகல கல்லராவ வித்தியாலயத்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 121 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சந்தன சோமவீர அவர்கள் வருகை தந்து மங்கள விளக்குகளை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Buy Kicks | Men Nike Footwear