05th January 2020 09:30:55 Hours
புதுக்குடியிறுப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள 68ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தில் நீண்ட நாட்களாக நிலவிய கட்டிட பற்றாக்குறையினை நிபர்த்திசெய்யும் முகமாக, 68ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எஸ் ஆரியசிங்க அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பலனாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தலைமையக கட்டிடத் தொகுதியானது செவ்வாய் கிழமை 31ஆம் திகதி 68ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
68ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தளபதியின் அழைப்பின் பிரகாரம் வருகை தந்த முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்கள் இப் புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார்.
இக்கட்டிட வடிவமைப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், 68ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்பு முன்னரங்கு படைத் தளபதி, பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Running sport media | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ