Header

Sri Lanka Army

Defender of the Nation

30th December 2019 10:12:52 Hours

புதிய மேஜர் ஜெனரல் A.G.D.N ஜயசுந்தரவிற்கு தலைமையகத்தில் வரவேற்பு

புதிதாய் மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவியுயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் A.G.D.N ஜயசுந்தர அவர்களுக்கு தம்புள்ள இமில்லாவெவையில் அமைந்துள்ள தலைமையகத்தில் கடந்த டிசம்பர் மாதம் (28) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த உயரதிகாரியை பொறிமுறை காலாட் படையணியின் உயரதிகாரிகளான பிரிகேடியர் L. S பாலசந்திர மற்றும் பிரிகேடியர் S J பிரியதர்ஷன அவர்கள் வரவேற்றனர். பின்னர் இந்த அதிகாரிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி பொறிமுறை காலாட் படையணியினரால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன,.

பின்னர் இந்த உயரதிகாரியினால் தலைமையக வளாகத்தினுள் உள்ள இராணுவ நினைவு தூபி வளாகத்திற்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீர ர்களுக்கு நினைவஞ்சலியையும் இவர் செலுத்தி தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பல் நிகழ்விலும் இணைந்து கொண்டபர்.

இறுதியில் குழுப் புகைப்படத்திலும் ஜெனரல் A.G.D.N ஜயசுந்தர அவர்கள் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.spy offers | Ανδρικά Nike