Header

Sri Lanka Army

Defender of the Nation

30th December 2019 22:40:38 Hours

65 ஆவது படைப் பிரிவின் 11 ஆவது ஆண்டு நிறைவு விழா

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் 11 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் (27) ஆம் திகதி இடம்பெற்றன.

இந்த ஆண்டு நிறைவு விழாவிற்கு வருகை தந்த பிரதம அதிதியான 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.

பின்பு தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் இணைந்து கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

மறுதினம் 28 ஆம் திகதி படையினர்கள் மத்தியில் கரப்பந்தாட்டம் மற்றும் கிரிக்கட் போட்டிகளும் அன்றிரவு இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன. 2008 ஆம் ஆண்டு இந்த படைப் பிரிவானது ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports Shoes | Air Jordan Release Dates Calendar