Header

Sri Lanka Army

Defender of the Nation

30th December 2019 23:10:38 Hours

படையினருக்கான புதிய தங்குமிட கட்டிடம் திறந்து வைப்பு

68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் A.S ஆரியரத்ன அவர்களினால் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள 682 ஆவது படைத் தலைமையக வளாகத்தில் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் மற்றும் சாஜன் தரத்திலுள்ள அங்கத்தவர்கள் தங்கியிருப்பதற்கான புதிய தங்குமிட கட்டிடமொன்று கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினமாக (25) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

இந்த கட்டிட திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வருகை தந்த 68 ஆவது படைத் தளபதியை 682 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் எஸ் கஸ்தூரிமுதலிகே அவர்கள் வரவேற்றார்.

புதிய தங்குமிட கட்டிடத்தில் 8 அறைகளும், நான்கு குளியலவைகளும் பெரிய சாலையும் நிர்மானிக்கப்பட்டிருந்தன. இந்த கட்டிட நிர்மான பணிகள் 4 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் படையினராலும், 682, 68 ஆவது படைப் பிரிவின் படையினராலும் மேற்கொள்ளப்பட்டன. Adidas footwear | Sneakers