Header

Sri Lanka Army

Defender of the Nation

30th December 2019 19:08:20 Hours

ஓமந்தை சிங்கப் படையணி முகாமில் திறந்து வைக்கப்பட்ட விடுதி

ஓமந்தையில் அமைந்துள்ள 21ஆவது இலங்கை சிங்க படையணி முகாமில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தங்குமிட விடுதியானது திங்கழன்று 30ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

21ஆவது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜே.எம்.ஜே பெரேரா அவர்களின் முயற்ச்சியின் பயனாக இந்த தங்குமிட விடுதியானது அமைக்கப்பட்டுள்ளது.பிரதேசத்திற்கு வருகை தரும் அனைத்து படையினரின் குடும்பங்களின் பயன்பாட்டிற்காக 21ஆவது இலங்கை சிங்க படையணின் படையினரால் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

56ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபல்யு.எம்.ஜே.ஆர்.கே. சேனாரத்ன அவர்களின் மேற்பார்வையில், 563ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேணல் கே.பி.ஏ. பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த விடுதியின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

21ஆவது இலங்கை சிங்க படையணியின் 11ஆவது ஆண்டு நிறைவு தின விழாவுடன் இவ் விடுதியின் திறப்பு விழாவானது இடம்பெற்றது. வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்கள் இந்நிகழ்வின் பிரதம அதியாக கலந்து கொண்டார்.

56ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி,563ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள்,21ஆவது இலங்கை சிங்க படையணின் அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.best Running shoes brand | Nike Dunk - Collection - Sb-roscoff