Header

Sri Lanka Army

Defender of the Nation

30th December 2019 09:12:52 Hours

புதிய விவசாய&கால்நடை பணிப்பாளரின் பதவியேற்பு

விவசாய &கால்நடை பணிப்பகத்தின் 2ஆவது புதிய பணிப்பாளராக பிரிகேடியர் எம்.ஆர் வின்னிஆராச்சி அவர்கள் தனது கடமையினை வெள்ளிக் கிழமை 27ஆம் திகதி பானாகொடையிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய பணிப்பாளர் தனது கையொப்பத்தினையிட்டு தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சில நாட்களின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறவிருக்கும் மேஜர் ஜெனரல் ஏ.கே.ஏ. புவநேக குணரத்ன அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest jordan Sneakers | Air Jordan Release Dates 2020