Header

Sri Lanka Army

Defender of the Nation

30th December 2019 21:10:38 Hours

திசர பெரேரா இராணுவ கிரிக்கெட் அணியில் இணைவு

இலங்கை கிரிகெட் அணியின் சகல துறை ஆட்ட நாயகன் திசர பெரேரா அவர்கள் இராணுவத்தின் கஜபா தொண்டர் படையணியில் ஆணைபெற்ற மேஜர் அதிகாரியாக இராணுவ கிரிக்கெட் அணியில் இணைந்து கொண்டுள்ளார்.

இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் தினேஷ் சந்திமால் இராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாட இந்த வருடம் இராணுவத்தின் தொண்டர் படையணியில் இணைந்து கொண்டார்.

1989 ஏப்ரல் 3ஆம் திகதி பிறந்த திசர பெரேரா அவர்கள் இலங்கை கிரிகெட் அணியின் சகல துறை ஆட்ட நாயகனாக காணப்படுகின்றார். 19 வயதுக்கு கீழ் நடைபெறும் கிரிகெட் போட்டியின் பந்து வீச்சாளராக பெரேரா அவர்கள் தனது செயற்பாட்டை ஆரம்பித்தார்.2007 ஜூலை மாதம் இடம்பெற்ற மூன்று நாடுகளுக்கிடையிலான போட்டி மற்றும் இந்தியாவுக்கெதிரான தொடர் ஆட்டப் போட்டி ஆகியவெற்றில் கலந்துகொண்டு தனது திறமையினை சிறப்பாக வெளிக்காட்டினார். இந்த திறமையின் மூலம் அவர் 2008 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற 19 வயது உலக கிண்ண கிரிகெட் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக அமைந்தது.

2009 ஆண்டு இறுதியில் இலங்கை அணியினர் மேற்கொண்ட இந்தியாவுக்கான சுற்றுப் பயணத்தின் போது ஏன்சலோ மெத்திவ்ஸ் அவர்களுக்கு பதிலாக அவர் சென்றார்.அவரது மூன்றாவது போட்டியில் தனது சிறந்த பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டங்கள் மூலம் இந்தியாவை பங்காளதேசத்தில் வைத்து தோழ்வியடையச் செய்ய பெரிதும் பங்காற்றினார்.

இந்தியாவுக்கெதிரான தனது திறமையினை பெரேரா அவர்கள் வெளிக்காட்டியுள்ளார். 2010ஆம் ஆண்டு தம்புல்லையில் நடைபெற்ற போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியில் மேலும் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அவரின் வெற்றியின் மூலம் அணியில் தகுந்த இடத்தை பிடித்தார். மற்றும் இங்கிலாந்துக்கு தனது முதலாவது தொடர் ஆட்ட போட்டிக்கான பயணத்தை மேற்கொண்டார்.

அவரின் துடுப்பாட்ட முறை மற்றும் பந்து வீச்சு ஆகியன 2010ஆம் ஆண்டில் சென்னை சுப்பர் கிங்கை பெரிதும் ஈர்த்தன. அதன் பின்னர் அவர் கொச்சி டஸ்கர்ஸ் கேரலா மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளில் விளையாடினார். அதன் பின்னர் அவர் 675000 அமேரிக்க டொலரினை பெற்று ஹைதரபாத் அணிக்காக விளையாடினார்.2013 ஆண்டு நடைபெற்ற T20 கிரிக்கெட் போட்டியில் 16 போட்டிகளில் விளையாடி 19 விகெட்டுக்களை வீழ்த்தினார். 2014ஆண்டு நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடுவதற்காக 16 மில்லியனை பெற்ற நிலையில் அவரால் குறித்த போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.

மேலும் இவர் கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவராவார். 25 வயதையுடைய திசர இலங்கைக்கு தனது திறமையின் மூலம் பெறுமையை சேர்த்துள்ளார்.மேலும் அவர் கிம்பேரியில் தென்னாபிரிக்காவுக்கெதிராக 44 பந்து வீச்சுக்களுக்கு 69 என்றடிப்படையில் திறமையினை வெளிப்படுத்தியதோடு, அவர்களினால் 300 ஓட்டங்களும் முறியடிக்கப்பட்டன. 2012 ஆண்டு பாக்கிஸ்தான் அணிக்க எதிராக நடைபெற்ற தொடர் போட்டியில் தொடர் விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இலங்கை கிரிகெட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரகம் போர்ட் அவர்கள் திசரவின் திறமையினால் பெருமிதப்பட்டார்.

2014ஆம் ஆண்டு பெப்ரவரி நடைபெற்ற பங்காளதேசத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெரேரா 67-8 இருந்து 180 ஓட்டங்களை பெறுவதற்கு பங்களிப்பு செய்து 80 ஓட்டங்களால் அவரின் அணி வெற்றி பெற்றது.

இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் கிரிகெட் வீரர் தினேஷ் சந்திமால் கூட இராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாட இந்த வருடம் இராணுவத்தின் தொண்டர் படையணியில் இணைந்துகொண்டார். spy offers | NIKE HOMME