Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2019 16:13:50 Hours

பின் தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52, 522 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 15 (சு) கஜபா படையணியினால் சரசாலை ஶ்ரீ கணேஷ வித்தியாலயத்தில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

அவிஸ்ஸாவெல புனித மரியாள் கல்லூரியின் அனுசரனையில் ஶ்ரீ கணேஷ வித்தியாலயத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் இம் மாதம் (27) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

2020 ஆம் ஆண்டிற்கான பள்ளி அமர்வுகள் ஆரம்பிக்கவிருப்பதால், வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த பணிகள் படையினரால் முன் வைக்கப்பட்டன.

அவிஸ்ஸாவெலா புனித மரியாள் கல்லூரியின் அதிபர் மற்றும் நிர்வாக குழுவினரது பங்கேற்புடனும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 15 ஆவது கஜபா படையணியின் பங்களிப்புடன் இந்த பாடசாலை உபகரணங்கள் இந்த பின் தங்கிய மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. Running Sneakers | Air Jordan