27th December 2019 10:13:50 Hours
அம்பாறை வன பயிற்சி கல்லூரிக்கு 40 ஆவது படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் ஏ.சி.லமாஹேவா அவர்கள் (27) ஆம் திகதி வெள்ளிக்கிழமை (27) பயிற்சி கல்லூரி வளாகத்தில் வைத்து தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இப் புதிய படைத் தளபதிக்கு அம்பாறை பயிற்சி கல்லூரியின் படையினர்களால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கி கொரவிக்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு படையினரால் நுலைவாயில் மரியாதை வழங்கப்பட்டன.
பின்னர், மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், அவர் தனது உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெப்பமிட்டு தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் படையினர்களுக்கு உரையாற்றுவதற்கு முன்பு ஒரு மா மரக்கன்றை பயிற்சி கல்லூரி வளாகத்தில் நட்டுவைத்தார்.
இந்த நிகழ்வில் பயிற்சி கல்லூரியின் கட்டளை தளபதி லெப்டினன் கேணல் W.A.K. T பெரேரா, அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். Asics footwear | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!