Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2019 18:10:27 Hours

கிழக்கில் இராணுவத்தினரின் தலைமையில் நத்தார் நிகழ்வுகள்

நத்தார் தினத்தை முன்னிட்டு கிழக்கு இராணுவத்தினரால் சேர்விசஸ், கரோல்ஸ், சண்டா கிளாஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நத்தார் நிகழ்வுகளை, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிகா பெனாண்டோ மற்றும் கட்டளை தளபதிகளின் ஆலோசனைக்கமைய ஏற்பாடுசெய்த படையினர்களுக்கு கிழக்கு கிறிஸ்தவ ஆயர்கள் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், (24) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சீனா துறைமுகத்தில் உள்ள புனித அந்தோனி தேவாலயத்தில் மிட்நைட் ஹோலி மாஸ் நடத்தப்படுவதற்கு முன்னர், 22 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினரால் நத்தார் கரோல் நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டன, இந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்வதில் சீனா துறைமுகத்தின் புனித அந்தோனி தேவாலயத்தின் ஆயர் வைத்தியர் ஜோர்ஜ் திசானாயக்க அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பேராயர் கலாநிதி கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல், 22 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.ஐ.மாரசிங்க, அவர்கள் கௌரவத்துடன் கலந்து கொண்டார். மேலும் திருக்கோணமலை பிரதேசத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் திரு சுதாத் நாகஹமுல்லா,சீன துறைமுக இலங்கை விமானபடை அகடமியின் ஏயர் கமடோர் ஆர்.ஏ.யு.பி ராஜபக்‌ஷ மற்றும் படைப் பிரிவு தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், படைப் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் பட்டாலியன்கள் உட்பட பல சிறப்பு அழைப்பாளர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டன. இந்த முழு நிகழ்வுகளும் இலங்கை இராணுவத்துடன் ஒருங்கிணைந்து சியத தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மேலும், 24 ஆவது படைப் பிரிவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிந்தக கமகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 241 ஆவது படைப் பிரிவு கட்டளை தளபதி கேணல் ஜானக விமலரத்ன அவர்களின் மேற்பார்வையின், அக்கரைப்பற்று 241 ஆவது படைப் பிரிவின் படையினர்கள் மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் 11 ஆவது பட்டாலியன் படையினர்களால் ஏற்பாட்டில் 2019 டிசம்பர் மாதம் (23) ஆம் திகதி நத்தார் கரோல் கீத நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வின் போது ஆயர் நிகாஸ்டன் பீட்டர்ஸ் அவர்களால் இயேசு கிறிஸ்துவின் புனித பிறப்பைக் குறிக்கும் விதமாக நத்தார் தகவல்கள் வாசிக்கப்பட்டதுடன், நடனம் பாடல்கள் உட்பட பல விதமான அம்சங்களுடன் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் மத பிரமுகர்கள், அம்பாறை மாவட்ட செயலாளர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பல அரச அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். latest Running Sneakers | Nike React Element 87