27th December 2019 15:13:50 Hours
வன்னி பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன் முயற்சியால் வவுனியா நந்திமித்ரகமவில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு (23) ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை பைகள், புத்தகங்கள், உட்பட பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வானது கேகல்லையில் உள்ள 'சூரியா தருவோ' அறக்கட்டளையின், அலுலேனா ரஜ மகா விஹாரையின் விஹாராதிபதி அதங்கொட சோமவன்ஷா தேரர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் உள்ள சிவில் விவகார அதிகாரியான லெப்டினன் கேணல் ஜி.ஏ.எல் கித்சிரி அவர்களின் முன் முயற்சியால் 563 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ் இயங்கும் 56 ஆவது படைப் பிரிவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜலியா சேனரத்ன மற்றும் 563 ஆவது படையணியின் கட்டளை தளபதி அவர்களின் மேற்பார்வையில் படையினர்களால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வின் போது, 563 ஆவது படைப்பிரிவு படையினர்கள் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு அருமையான மதிய உணவை வழங்கின.
அலுலேனா ரஜ மகா விஹாரையின் விஹாராதிபதி அதங்கொட சோமவன்ஷா தேரர் மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரிகள், 563 படைப்பிரிவின் அதிகாரிகள், கட்டளை பட்டாலியன்கள் இந்த சமூக திட்டத்தில் இணைந்தனர்.Sports Shoes | balerínky