23rd December 2019 16:04:29 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்குற்பட்ட 16 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் மகா ஓயா நீர்பாசனத் துறை மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் கடந்த (19) ஆம் திகதி வியாழக்கிழமை மகாஓயா பிரதேசத்தில் உள்ள மகசியப்பாலங்கண்டிய அனைக்கட்டு மண் மூட்டைகளால் நிரப்பபட்டு நீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்கும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டனர்.
தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக, முழு பிரதேசமும் வெள்ளத்தால் மூழ்கும் நிலையில் படையினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய படையினரால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
24 ஆவது படைப் பிரிவு படைத் தளபதி மற்றும் கட்டளை தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் கடந்த (19) ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தது.Sport media | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK