26th December 2019 10:34:17 Hours
222 ஆவது படைப் பிரிவு மற்றும் 22 ஆவது விஜபாகு காலாட் படையணியின் படையினரால் 22 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் “பியூச்சர் லைஃப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், நிறுவனத்தினரின் நிதியுதவியுடன் கிழக்கு தெகிவத்த மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வருமை கோட்டின் கீழ் வாழும் 184 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் (21) ஆம் திகதி சனிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த திட்டம் “பியூச்சர் லைஃப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்', நிறுவனத்தின் முகாமையாளர் திரு தனுஷ்க உடுகம மற்றும் நிறுவனத்தில் உள்ள அனைத்து அங்கத்தவர்களின் உதவியுடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி, 22 ஆவது படைப் பிரிவு தலைமையகம் மற்றும் 222 ஆவது படைப் பிரிவின் தளபதியின் ஆகியோர்களின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்றன.
இந்த பரிசு பொதிகளில் ஒரு பாடசாலை பை, ஒரு ஷூ ஜோடி (டி.எஸ்.ஐ), பள்ளி சீருடைக்கான ஆடைகள், ஒரு மதிய உணவு பெட்டி, 2020 ஆம் ஆண்டிற்கு தேவையான அனைத்து பயிற்சி புத்தகங்களும், ஒரு தண்ணீர் பாட்டில் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் 222 ஆவது படைப் பிரிவின் தளபதி கேணல் எம்.ஜீ. டபில்யூ விமலசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், 222 ஆவது படைப் பிரிவின் சிவல் விவகார அதிகாரிகள், 22 ஆவது விஜபாகு காலாட் படையணியின் அதிகாரிகள், பட்டாலியன் தலைமையகம் மற்றும் படைப் பிரிவுகளின் அதிகாரிகள் பலர் கலந்து கொணடனர். Running sports | nike fashion