26th December 2019 08:12:13 Hours
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 12 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்கு புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஏ.எல்.பி.எஸ் திலகரத்ன அவர்கள் (23) ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இப் புதிய படைத் தளபதிக்கு இப் படைப் பிரிவு தலைமையகத்தின் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி நுலைவாயிற் மரியாதை மற்றம் இராணுவ மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டன.
பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட இப் புதிய படைத் தளபதி மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டதுடன், படைப் பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார்.
இந்த நிகழ்வில் படைப் பிரிவின் பதவி நிலை அதிகாரிகள் படைப் பிரிவின் அதிகாரிகள்,சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.Sneakers Store | Nike for Men