26th December 2019 11:54:56 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்கள் 9 மாத காலமாக பதவியில் இருந்து விடைப் பெற்று செல்லும் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வானது (23) ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் வைத்து இடம் பெற்றது.
விடைப் பெற்று செல்லும் இந்த படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி 8 ஆவது இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் படையினரால் நுலைவாயிற் மரியாதை மற்றம் மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டதுடன் இப் படைத் தளபதி விடைப் பெற்றுசெல்வதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ ஆவனத்தில் கையெழுத்திட்டார். இப் படைத் தலைமையகத்திற்கு 58 ஆவது படைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜெயந்த குணரத்ன அவர்கள் கடமை பெறுப்பேற்பார் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.
இந்த நிகழ்வில் அடையளமாக படைத் தலைமையக வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வின் பின்னர், அனைத்து படையினர்களுடன் குழு புகைப்படத்திலும் கலந்துகொண்ட அவர் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார் அதன் பின்னர் அவர் தனது பணியில் போது படையினரால் தனக்கு அளித்த ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரை நிகழ்திதுடன் அதன் பின்னர் வருகை தரும் தளபதிக்கும் தங்களது பங்களிப்பை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகள், படைப்பிரிவு தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடன் பிரியாவிடை இரவு உணவிருந்தும் இடம்பெற்றது. Authentic Sneakers | adidas