26th December 2019 19:50:13 Hours
நத்தார் தினத்தை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிரி அவர்களின் வழிக்காட்டுதலின் பேரின் வன்னி படையினரால் மதவச்சியில் அமைந்துள்ள புனித ஜோசப் தேவாலயத்தில் கெரோல் நிகழ்வுகள் (22) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடுசெய்யப்பட்டன.
மேலும் இந்த நிகழ்வில் புனித ஜோசப் தேவாலயத்தில் பாடசாலை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களால் முன் வைக்கப்பட்ட நிகழ்வுகள், இந்த நிகழ்வில் வண்ணமயமாக காட்சியளித்தது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் கல்விகற்றலுக்கான பாடசலை உபகரணங்கள் பரிசாக வழங்கியதுடன், தேவாலயத்தில் ஆயர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ சகோதரிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கந்தானை டி மெசெனோட் கல்லூரியின் ஆயர் திலீப ஜயமஹா, மதவச்சி புனித ஜோசப் தேவாலயத்தின் ஆயர் மற்றும் கிறிஸ்தவ சகோதரிகள், பிதேசத்தின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்விற்கு படையினரால் முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டன.
மேலும் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிரி அவர்களின் வழிக்காட்டலுக்கமைய வன்னி படையினரால் நத்தார் கரோல்கள், நன்கொடை வழங்கும் நிகழ்வுகள் மற்றும் நத்தார் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டனர்.
அத்துடன் 21 இலங்கை சிங்க படையணியின் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் , 563 ஆவது படைப் பிரிவு தலைமையகம் மற்றும் 56 ஆவது படைப் பிரிவின் பொது பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜலியா சேனரத்ன ஆகியோரின் மேற்பார்வையின் புத்தியசின்னகுள பிரதேசத்தில் உள்ள பச்சிமா மேரி கத்தோலிக்க தேவாலயத்தில் ஆயர் சுகந்தராஜா கத்தாலிக்க பக்தர்களின் பங்களிப்புடன் (24) ஆம் திகதி செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் 56 ஆவது படைப் பிரிவின் பொது பணிப்பாளர், மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஜலியா சேனரத்ன, 561 மற்றும் 563 படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், 56 பிரிவு தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், 561, 563 படைப்பிரிவு அதிகாரிகள், படையினர்கள் உட்பட கத்தோலிக்க மக்கள் பலர் கலந்து கொண்டனர்.latest Running | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival