17th December 2019 13:27:27 Hours
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற மனிதாபிமானமான யுத்தத்திற்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கிய முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள 64ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தின் 11வது ஆண்டு நிறைவு விழாவானது செவ்வாய் கிழமை 10ஆம் திகதி சமய அனுஷ்டனங்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது.
அன்னதான நிகழ்வினைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை மாலை(6) ஆரம்பிக்கப்பட்ட பிரித் நிகழ்வுகள் அடுத்த நாள் காலை(7) வரை இடம்பெற்றன. 64ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபள்யு.டி.சி.கே கொஸ்டா அவர்கள் மகா சங்க தேரர்களை பிரித் செத் நிகழ்வுகளுக்கு அழைத்து அவர்களுக்கு சம்பிரதாய வெற்றிலை தட்டினை வழங்கி வைத்தார்.
படைத் தளபதி, அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஒட்டுசுட்டான் சிவன்கேவில் மற்றும் கலமுரிப்பு தேவாலயம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற இந்து, மற்றும் கத்தோலிக்க சமய நிகழ்வுகளில் ஞாயிறு 8ஆம் திகதி கலந்து கொண்டதோடு,முதியங்காடுகுளம் பள்ளிவாயலில் இடம்பெற்ற இஸ்லாமிய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.
10ஆம் திகதி 64ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதியவர்கள் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஒரு மரக் கன்றினையும் நட்டார். அதன் பின்னர் அனைத்து படையினரும் மதியபோசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர். மேலும் படைத் தளபதியவர்களினால் படைப் பிரிவின் 11வது ஆண்டு நிறைவு தினத்தை படையினருக்கு ஞாபகமூட்டியதோடு, சிவில் மற்றும் இராணுவ நல்லிணக்கம் மற்றும் ஒழுக்கம் உள்ளிட்டவைகளை தொடர்ச்சியாக பேணுமாறு எடுத்துக் கூறினார்.
ஆண்டு நிறைவு விழாவின் இரண்டாவது கட்டமாக கரப்பந்தாட்டம் மற்றும் கிரிகெட் போட்டிகளானது படைத் தலைமையகங்களுக்கிடையில் 10-13ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டன. கரப்பந்தாட்டம் மற்றும் கிரிகெட் போட்டிகளின் இறுதி போட்டிகளானது இரண்டு நாட்களில் நடாத்தப்பட்டன.500 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் படையினர் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியுடன் இந்நிகழ்வு நிறைவடைந்தன. Running Sneakers Store | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ