Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2019 08:29:36 Hours

படையினரினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழுள்ள 111 பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்த டொலுவ இகுருவத்த கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச புத்தகங்கள் மற்றும் ஏனைய பாடசலை உபகரணங்களானது திங்கழன்று 23ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

111 பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு திரு ரணில் பெனாண்டோ மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களினால் அனுசரணை வழங்கப்பட்டது. பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒவ்வொரு மாணவரும் ஒரு சோடி காலணி, பாடசாலை பை,மற்றும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்விற்கு முன்னதாக பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்வானது பெற்றோர்களின் உதவியுடன் படையினரால் முன்னெடுக்கப்பட்டன.

கமபொல வலயக் கல்வி பணிப்பாளர், 111 பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். buy footwear | Women's Designer Sneakers - Luxury Shopping