25th December 2019 12:12:13 Hours
வவுனியா, போகஸ்கமுவ பிரதேசத்தில் இராணுவ படைவீரர் ஒருவர் கடமையிலிருந்து திரும்பிச் செல்லும் போது அவரை தாக்கிவிட்டு தப்பயோடிய நபரை போகஸ்கமுவ பொலிஸார், இராணுவ புலணாய்வு துறையினர் & இராணுவ பொலிஸார் ஆறு மணி நேரத்திற்குள் கெக்கிராவை பிரதேசத்திற்கு அருகில் வைத்து இன்று காலை 25ஆம் திகதி கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த குறித்த துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.
வவுனியா, போகஸ்கமுவ பிரதேசத்தில் இன்று காலை 25ஆம் திகதி 4.00 மணியளவில் குறித்த படைவீரர் தனது கடமை நிலையத்தில் இருந்து பாதுகாப்பு அறைக்கு செல்லும் வேளை ,இனம்தெரியாத நபர் குறித்த இராணுவ படைவீரை தாக்கியதுடன் அவரின் துப்பாக்கியினை எடுத்துச் சென்றுள்ளார். காயங்களுக்குள்ளான இராணுவ படைவீரர் அநுராதபுர விக்டோரியா இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சையினை பெற்று வருகின்றார். மேலும்பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Nike shoes | Nike