Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2019 17:05:39 Hours

மின்னேரியவில் இடம்பெற்ற பயிற்சி நிறைவு விழா

மின்னேரியவில் அமைந்துள்ள காலாட் பயிற்சி நிலையத்தில் இராணுவத்தில் புதிதாய் இணைந்த படையினரது பயிற்சி நிறைவு நிகழ்வானது இம் மாதம் (21) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக காலாட் பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் H.M.T.B ஹங்கிலிப்பொல அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். இராணுவத்திலுள்ள பொறியியல் படையணி, சமிக்ஞை படையணி, இலங்கை சிங்கப் படையணி, கஜபா படையணி மற்றும் மருத்துவ படையணியைச் சேர்ந்த 138 புதிய படை வீரர்கள் இந்த பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறினர்.

இந்த பயிற்சிகளில் சிறந்த பயிற்சியாளராகவும், சிறந்த சூட்டாளராக கஜபா படையணியைச் சேர்ந்த M.L.R குமாரவும், சிறந்த அணிவகுப்பாளராக M. பரனவிதாரன அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இராணுவ வீரர்கள் வெளியேறும் இறுதி நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் ,பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றிக் கொண்டனர். best shoes | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret