Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2019 18:29:36 Hours

யாழ் படைத் தளபதியவர்கள் இராணுவ திட்டங்கள் தொடர்பாக அமைச்சருக்கு விளக்கமளிப்பு

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சரான திரு ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இம் மாதம் (21) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் இவரை யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் வரவேற்று பின்னர் இருவருக்கு இடையிலான சந்திப்பொன்று யாழ் பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெற்றன.

இந்த சந்திப்பின் போது நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றப் பணிகளின் தற்போதைய அபிவிருத்தி, நிலப் பிரச்சினைகள் மற்றும் யாழ் குடா நாட்டில் உள்ள நலன்புரி நிலையங்கள் தொடர்பான நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன. மேலும், அமைச்சரும் அவரது ஊழியர்களும் யாழ் குடா நாட்டில் தற்போதைய இராணுவ சமூக நலன்புரித் திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை யாழ் படைத் தளபதியிடமிருந்து பெற்று கொண்டனர்.

மேலம் இச்சந்திப்பு ஒன்று கூடலில் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் மற்றும் இராஜாங்க செயலாளர்கள், யாழ் மாவட்ட செயலாளர், அபிவிருத்தி பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதி மாவட்ட செயலாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike shoes | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth