24th December 2019 09:29:36 Hours
இம் மாதம் 16 – 20 ஆம் திகதி வரை இலங்கைக்கான சுற்றுலா விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பொறிமுறை காலாட் படையணி குழுவினர் தம்புள்ள ஹல்மில்லவெவயில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் படையணி தலைமையகத்திற்கு சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டனர்.
இங்கு வருகை தந்த இந்திய இராணுவ அதிகாரிகளை பொறிமுறை காலாட் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் S.J பிரியதர்ஷன அவர்கள் வரவேற்றார்.
இந்திய இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளான கேர்ணல் ரோஹித் குப்தா, மேஜர் சோனம் ஜூனிஜா மற்றும் மேஜர் ஓம் சீடன்புரி போன்றோர் இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.
அத்துடன் மெனிக்பாமில் அமைந்துள்ள பொறிமுறை காலாட் படையணி பயிற்சி நிலையத்திற்கும் இவர்கள் விஜயத்தை மேற்கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் கேர்ணல் பாலசூரிய அவர்கள் இந்த இந்திய அதிகாரிகளை வரவேற்றார்.
இந்த இந்திய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் எதிர்காலங்களில் இடம்பெறவிருக்கும் கருத்தரங்குகள் தொடர்பான தெ ளிவூட்டல்களை பெற்றுகொள்ளும் நோக்கத்துடன் கலந்துரையாடல்களையும் இச்சந்திப்பின் போது பெற்றுக் கொண்டனர்.
மேலும் இந்த இந்திய இராணுவ அதிகாரிகள் மன்னார், தம்புள்ளை, திருகோணமலை மற்றும் கண்டி பிரதேசங்களிற்கும் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics footwear | 『アディダス』に分類された記事一覧