Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2019 16:04:45 Hours

முல்லைத்தீவில் இடம்பெற்ற நத்தார் கரோல்ஷ் நிகழ்வு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட நத்தார் கரோல்ஸ் நிகழ்ச்சிகள் இம் மாதம் (22) ஆம் திகதி புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன மற்றும் கத்தோலிக்க குரு முதல்வர் அருட்பணி P. J ஜபரத்தினம் அடிகளார் வருகை தந்து சிறப்பித்தனர்.

நத்தார் கரோல்ஸ் நிகழ்வில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மாணவர்கள் மற்றும் இராணுவ இன்னிசை குழுவினர்கள் நத்தார் கீதங்களை வழங்கி வைத்து வருகை தந்த பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

நிகழ்வில் இறுதி அங்கமாக நத்தார் தாத்தா வருகை தந்து இப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு பரிசுகளை வழங்கிவைத்து அவர்களுடன் ஆடிப்பாடி சிறார்களை சந்தேசப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் கிறிஸ்தவ மதகுருமார்கள், அருட் சகோதரிகள், கட்டளை தளபதிகள், அரச உயரதிகாரிகள் மற்றும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேசவாசிகள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். spy offers | Air Jordan