Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2019 21:29:36 Hours

காலஞ் சென்ற முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் H. V அதுகோரல அவர்களது மரணச் சடங்குகள்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ மூத்த அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் H. V அதுகோரல psc FBIM அவர்களது மரண இறுதிச் சடங்குகள் இராணுவ கௌரவ மரியாதையுடன் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.

இவர் 89 ஆவது வயதில் இம் மாதம் (20) ஆம் திகதி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவரது பூதவுடல் பொறளை பொது மயானத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முன்னாள் இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ உயரதிகாரிகளின் பங்களிப்புடன் அடக்கம் செய்யப்பட்டன.

இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரண தாங்கி வண்டிகளில் இவரது பூதவுடல் தேசிய கொடியினால் போத்தியவாறு இராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையுடன் பொறனை பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.

அங்கு எடுத்து செல்லப்பட்ட இவரது பூதவுடல் (பகுதி 1) இராணுவ செய்தி உரையின் பின்பு தற்போதைய இராணுவ தளபதி அவர்களினால் இவர்களது குடும்பத்தாறுக்கு சிறப்பு பதக்கமொன்று இந்த மரணச்சடங்கில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்த மரன சடங்கில் முன்னாள் இராணுவ தளபதிகளான ஜெனரல் சாந்த கோட்டேஹொட, ஜெனரல் தயா ரத்னாயக, ஜெனரல் ஜயசூரிய அவர்கள் இணைந்து கொண்டனர்.

மரணச்சடங்குகள் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் காரியாலத்தின் வழிநடத்தலின் கீழ் இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இவருக்கு மரனச்சடங்கில் உரைக்கப்பட்ட (பகுதி 1) இராணுவ உரையின் விபரஙகள் கீழ்வருமாறு. Running sneakers | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp