Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2019 16:05:39 Hours

யாழ் பாதுகாப்பு படையினரால் மர நடுகைத் திட்டம் முன்னெடுப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிக சூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மில்லியன் மர நடுகைத் திட்டமானது வியாழக் கிழமை 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக 513ஆவது பாதுகாப்பு படைத் தலைமைகத்தின் கீழுள்ள 11ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் அராலி பிரதேசத்தில், 3000 பனை மர விதைகள் நடும் பணியானது ஆரம்பிக்கப்பட்டது.

51ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க, 513ஆவது காலாட் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி, 11ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, யாழ் பிரன்ஸ் சங்கத்தின் தலைவர் கலாநிதி. சுதம்பரன் மோகன் மற்றும் அதன் உறுப்பினர்கள், யாழ் பனை அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் திரு எம்.பிலோக நாதன் மற்றும் அவரின் சகஊளியர்கள், 513ஆவது காலாட் படைத் தலைமையகம்,11ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, மற்றும் 16ஆவது கெமுனு ஹேவா படையணி ஆகிய படையணிகளின் படை வீரர்கள் உட்பட பலர் இப் பனை மர விதைகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்டனர். Adidas footwear | adidas Yeezy Boost 350