20th December 2019 19:18:41 Hours
லெப்டினன்;ட் ஜெனரல் (ஓய்வு) எச் வி அதுகோரள விஎஸ்வி பிஎஸ்சி எப்பிஐஎம் இலங்;கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த அதிகாரியவர்கள் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை (20) தமது 89ஆவது வயதில் இவர் காலாமானார்.
மேற்படி அதிகாரியவர்களின் பூத உடலானது பொரள்ளை ஏ எப் ரைமன்ட் பியுனரால் பாலரில் அஞ்சலிக்காக இன்று சனிக் கிழமை (21) 12.30 மணிவரை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிக் கிரிகைகள் திங்கட் கிழமை (23) பொரள்ளையில் இடம் பெறவுள்ளதுடன் அன்னாரின் விலாசம் இல 178 ஹில் வீதி தெஹிவளையாகும்.
மேலும் இவ் அதிகாரியவர்கள் 1930ஆம் ஆண்டு 30ஆம் திகதி பிறந்ததுடன் இலங்கை இராணுவத்தில் 1950ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி இணைந்ததுடன் தமது பயிற்சிகளை நிறைவு செய்து கெடெட் அதிகாரியாக 1952ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் திகதி வெளியேறியதுடன் 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
மேலும் லெப்டினன்;ட் ஜெனரல் (ஓய்வு) எச் வி அதுகோரள அவர்கள் தமது 33வருட கால சேவையின் போது பலவாறான சேவைப் பதக்கங்களான விஷிஷ்ட சேவா விபூஷன பதக்கம் பூர்ன பூமி பதக்கம் போன்ற பல பதக்கங்களை பெற்றுள்ளதுடன் மேலும் அவர் பிஎஸ்ஸி பட்டத்தை பதக்கத்தை சபுகஸ்கந்தை பாதுகாப்பு சேவைக் கட்டளைக் கல்லூரியில் பெற்றுள்ளார்.
அத்துடன் லெப்டினன்;ட் ஜெனரல் (ஓய்வு) எச் வி அதுகோரள அவர்கள் இலங்கை இலேசாயுத காலாட் படைத் தலைமையகத்தின் தளபதியாக கடந்த கால ஜனாதிபதியவர்களால் நியமிக்கப்பட்டதுடன் இவர் இப் படையணிக்கான கீதத்தையும் இயற்றமைக்காக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் அவர் 1ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக மற்றும் விடேச படைப் பிரிவின் தளபதியாக இராணுவ பயிற்றுவிப்பு மையத்தின் தளபதியாக இராணுவ தொண்டர் படையணியின் நிர்வாக அதிகாரியாக இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளராகவும் காணப்பட்டார். மேலும் பகுதி 1ஆனது இராணுவத் தளபதியவர்களால் அல்லது இப் படைத் தலைமையக தளபதியவர்களால் வழங்கப்படும். Running sports | Ανδρικά Nike