20th December 2019 17:13:00 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62ஆவது படைத் தலைமையகத்தின் 621ஆவது படையினரால் மற்றுமோர் சமூக சேவைத் திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணப் பொருட்கள் பாடசாலை பாதணிகள் புத்தகப் பைகள் மற்றும் கொப்பிகள் போன்றன வறுமைக் கோட்டின் கீழ் காணப்படும் 27 மாணவர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் திரு செவோ அபேசிங்க அவர்;களின் குடும்பத்தாரின் அனுசரனையில் வழங்கப்பட்டுள்ளது.
கெப்பிட்டிகொல்லாவைப் பிரதேசத்தில் உள்ள அலபெத்வௌ எனும் பாடசாலையின் தரம் 1முதல் 5 வரையில் கல்வி பயிலும் வறிய குடும்ப பின்னனியைக் கொண்ட 27 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப் பொருட்கள் 621ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் தலைமையில் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2020ற்கான டீஎஸ்ஐ பாதணிகள் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வுகள் செவ்வாய்க் கிழமை (17) பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வுகள் இடம் பெறுவதற்கு முன்னர் 621ஆவது படையினரால் இப் பாடசாலை வளாகமானது சுத்திகரிக்கப்பட்டது.
இந் நிகழ்வானது பாடசாலை மாணர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம வாசிகள் போன்றோரின் பங்களிப்போடு 621ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் தலைமையில் இடம் பெற்றதோடு இதன் போது 17ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினரால் சிற்றுண்டிகள் போன்றன வழங்கப்பட்டது. latest jordan Sneakers | Nike Shoes, Sneakers & Accessories